முகப்பு
மதுரை

இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா

சிங்கம்புணரி, ஜன. 8:      சிங்கம்புணரியில் பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  சிங்கம்புணரி- திருப்பத்தூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் நடைப

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

சிங்கம்புணரி, ஜன. 8:      சிங்கம்புணரியில் பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 சிங்கம்புணரி- திருப்பத்தூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக

வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருணகிரி தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் லோகநாதன் வரவேற்றார்.

  விழாவில் 1,2,3 மற்றும் 18-வது வார்டுகளைச் சேர்ந்த 240 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் பூமணி, துணைச் செயலர் சேகர், நகரச் செயலர் எம்.எஸ்.யாகூப், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் அம்பலமுத்து, சோமசுந்தரம், பேரூராட்சி துணைத் தலைவர் முத்து முகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் குணசேகரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →