முகப்பு
மதுரை

பள்ளிவாசல் ஒப்படைப்பு

வத்தலகுண்டு, ஜன.8: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சின்ன பள்ளிவாசல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  வத்தலகுண்டு கணவாய்ப்பட்டி சாலையில் 27 ஆண்டுகளுக்கு முன் சின்ன பள்ளிவாசல் த

மதுரை

பள்ளிவாசல் ஒப்படைப்பு

வத்தலகுண்டு, ஜன.8: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சின்ன பள்ளிவாசல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  வத்தலகுண்டு கணவாய்ப்பட்டி சாலையில் 27 ஆண்டுகளுக்கு முன் சின்ன பள்ளிவாசல் த

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வத்தலகுண்டு, ஜன.8: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சின்ன பள்ளிவாசல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

 வத்தலகுண்டு கணவாய்ப்பட்டி சாலையில் 27 ஆண்டுகளுக்கு முன் சின்ன பள்ளிவாசல் தொடங்கப்பட்டது. அதன் முத்தவல்லியாக சையதுமுகமது என்பவர் செயல்பட்டார்.

  இந்நிலையில் சின்ன பள்ளிவாசல் வளர்ச்சியைக் கருதி, அதன் நிர்வாகத்தை பெரிய  பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.  இந்நிகழ்ச்சி சின்ன பள்ளிவாசலில் நடைபெற்றது.

 பெரிய பள்ளிவாசல் நிர்வாக அதிகாரி அல்லாபக்ஸ் தலைமை வகித்தார்.  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அப்துல்ரகுமான், திண்டுக்கல் தொழிலதிபர்  முகமதுசலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

 மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அகமதுசல்மான், வக்பு ஆய்வாளர் இப்ராகிம்,  டாக்டர் ரியாஸ், ஜாபர்சேட், ஹக்கிம், பார்முகமது, நாசர், நிஜாமுதீன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.  பீர்முகமது பேசுகையில், ஈத்கா மைதானத்தில் ஆங்கில நர்சரி பள்ளி தொடங்க  வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.   சின்ன பள்ளிவாசலை ஒப்படைத்த சையது முகமதுக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →