விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியக் குழு கூட்டம்
சிவகங்கை, ஜன. 8: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய ஆய்வுக் குழு கூட்டம், சென்னையில் நடந்த தமிழர் இறையாண்மை மாநாட்டுக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

சிவகங்கை ஒன்றியச் செயலாளர் ம.மலைச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் கரு.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அ.முத்துராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
மாவட்ட பொஹருளாளர் க.சந்திரன், சி.ஆளவந்தான், உ.சுடர்மணி, உ.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்றுவது, பூத் கமிட்டி அமைப்பது, அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைச் செயலாளர் க.செந்தில்வளவன் நன்றி கூறினார்.