முகப்பு
மதுரை

விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்ட பயிற்சி முகாம்

பெரியகுளம், ஜன. 8:÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்வள மற்றும் நிலவளத் திட்டம் சார்பில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம் குற

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

பெரியகுளம், ஜன. 8:÷தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர்வள மற்றும் நிலவளத் திட்டம் சார்பில் பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை துவங்கி 3 நாள்கள் நடைபெற்றன.

÷கல்லூரி முதல்வர் வி.பொன்னுச்சாமி முகாமுக்குத் தலைமை வகித்தார். முனைவர் ஏ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நீர்வள, நிலவள திட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன் முகாமைத் தொடக்கி வைத்தார். முனைவர் ஆர்.நாகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ÷முகாமில் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் முறை மற்றும் பராமரிப்புக் குறித்து வேளாண் பொறியாளர்கள் விளக்கிக் கூறினர்.

மேலும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகளுக்குச் செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →