காரைக்குடி தீயணைப்பு அலுவலகத்துக்கு கட்டட வசதி செய்து தரப்படுமா?
காரைக்குடி, ஜன. 19:÷மிகவும் பழமையான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிவரும் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு நகரின் மையப் பகுதியில் புதிய அலுவலகக் கட்டடம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை
காரைக்குடி, ஜன. 19:÷மிகவும் பழமையான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிவரும் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு நகரின் மையப் பகுதியில் புதிய அலுவலகக் கட்டடம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், மத்திய மின் வேதியியல் அறிவியல் ஆய்வகம், செட்டி நாடு பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. மேலும் புதுவயல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 3 காகித ஆலைகள், நூற்பாலைகள் உள்ளன. இப்பகுதியில் தீ விபத்து ஏற்ட்டால் காரைக்குடி தீயணைப்பு நிலையத்தினரை அணுகுகின்றனர்.
÷இந்த தீயணைப்பு நிலையத்தில், 2007-ல் 71 தீ விபத்துகள், 11 போக்குவரத்து விபத்துகள் என மொத்தம் 82 மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, 2008-ல் 43 தீ விபத்துகளும், 100 மீட்புப் பணிகளும், 2009-ல் 71 தீ விபத்துகளும், 90 மீட்புப் பணிகளும், 2010-ல் 72 தீ விபத்துகளும், 66 மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.÷ஆனால், காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. சிறிய அளவிலான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத, இக் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக நகராட்சிக்கு ரூ. 102 வாடகை செலுத்தப்படுகிறது. 1948-ல் கட்டப்பட்ட பழமையான இக் கட்டடத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.
Advertisement
÷இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி எம். மகாலிங்கமூர்த்தி கூறியதாவது:÷தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் அமைப்பதற்காக காரைக்குடி அருகே பேயன்பட்டியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ÷ஆனால் நகரின் மையப் பகுதியில் தீயணைப்பு நிலையத்தை அமைத்தால்தான் உரிய இடங்களுக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ÷தீயணைப்பு வீரர்கள், அலுவலர்களுக்கு அரசு குடியிருப்பும் இல்லை.
தற்போது ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. வாகன விபத்தில் சிக்கிக் கொள்பவர்களை மீட்க நவீன கட்டர் மிஷின் வசதியை கேட்டுள்ளோம் என்றார்.