மதுரை

அடிப்படை வசதியற்ற அரசு பள்ளிதீர்வு காணப்படுமா?

தேனி, ஜூலை 29:  தேனி அருகே அரண்மனைப்புதூரில் அரசு கால்நடை மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்த வளாகத்தில், சிதிலமடைந்த வகுப்பறை கட்டடத்துடன் செயல்பட்டு வரும் தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சீரமைத்து,

கோ.ராஜன்

தேனி, ஜூலை 29:  தேனி அருகே அரண்மனைப்புதூரில் அரசு கால்நடை மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்த வளாகத்தில், சிதிலமடைந்த வகுப்பறை கட்டடத்துடன் செயல்பட்டு வரும் தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சீரமைத்து, மாணவர்கள் சிரமத்தை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 அரண்மனைப்புதூரில் கடந்த 1928-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. கடந்த 2007, ஆகஸ்ட் மாதம் இப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் அரண்மனைப்புதூர், முல்லைநகர், கோட்டைப்பட்டி, வீருசின்னம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து 192 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை  ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.   

 கடந்த 1997-ம் ஆண்டு இந்தப் பள்ளி வளாகத்தில் கால்நடை மருத்துவமனை தொடங்கி செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   ஒருங்கிணைந்த வளாகத்தில் கால்நடை மருத்துவமனையும், பள்ளியும் செயல்பட்டு வருவதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வகையில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். பள்ளிக்குள் செல்லும் மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கால்நடை மருத்துமனையில் சிகிச்சைக்கு நிறுத்தி வைக்கப்படும் கால்நடைகளால் இடையூறு ஏற்படுகிறது. கால்நடைகளால் வகுப்பறையில் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 கால்நடை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கல்வித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் கூறினர்.

சிதிலமடைந்த வகுப்பறை கட்டடம்: இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் பள்ளி வளாகத்திலும், மேற்கூரை சேதமடைந்துள்ள வகுப்பறைக்கு உள்ளேயும் மழை நீர் தேங்கி நிற்பதாக மாணவர்கள் கூறினர்.

 சேதமடைந்த கட்டடத்தை வகுப்பறையாக பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கு ஆய்வுக்குச் செல்லும் கல்வித் துறை அதிகாரிகள் குறிப்பு எழுதி வைத்து விட்டுச் சென்றாலும், மாற்று ஏற்பாடு இல்லாததால் மாணவர்களை இந்தக் கட்டடத்திலும், தலைமை ஆசிரியர் அறையிலும் அமர வைத்து பாடம் நடத்த வேண்டியுள்ளதாக  ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 அரண்மனைப்புதூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்படும் வகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதிய இடம் ஒதுக்கீடு செய்யவும், கால்நடை மருத்துவமனையை இடம் மாற்றம் செய்யவும், புதிய வகுப்பறை கட்டடம் கட்டித் தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 இது குறித்து தேனி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுபாஷினியிடம் கேட்டதற்கு, அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேனி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது. பள்ளியை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT