பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஊரகக் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்தார். மதுரை ஊரகப் பகுதியில் பிளஸ் 2 தேர்வெழுதிய காவலர் குடும்பத்து மாணவ, மாணவியர் 57 பேர்
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஊரகக் காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்தார்.
மதுரை ஊரகப் பகுதியில் பிளஸ் 2 தேர்வெழுதிய காவலர் குடும்பத்து மாணவ, மாணவியர் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், 15 பேர் 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் பேசுகையில், குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் மேற்படிப்பு படிக்கலாம். வருங்காலத்தில் சிறப்பாகப் படித்து உயர் பதவிகளைப் பெறலாம். கல்லூரி சேர்க்கை குறித்த உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இடைவிடாத பணியிலும், தங்களது குழந்தைகளை படிக்க வைத்து, அதிக மதிப்பெண் பெற பாடுபட்ட காவலர்களையும் பாராட்டினார்.