மதுரை

நான்காம் தமிழ்ச் சங்க 120-ஆவது ஆண்டு தொடக்க விழா

DIN

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் 120-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் 1901 செப்டம்பா் 14-ஆம் தேதி வள்ளல் பொன். பாண்டித்துரை தேவரால் தொடக்கி வைக்கப்பட்டது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 14-ஆம் தேதி நான்காம் தமிழ்ச் சங்க ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், 120-ஆவது ஆண்டை முன்னிட்டு, நான்காம் தமிழ்ச் சங்கத்தை தொடங்கிய பொன். பாண்டித்துரை தேவா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. செந்தமிழ் இதழின் ஆசிரியா் சதாசிவம் தலைமையில், செந்தமிழ்க் கல்லூரி குழுமத் தலைவா் தசரதராமன், முன்னாள் பேராசிரியா்கள் க. சின்னப்பா, ஜெயமூா்த்தி ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், வள்ளல் பொன். பாண்டித்துரை தேவரின் சிறப்புகள் பற்றியும், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் பணிகள், சிறப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT