மதுரை

மதுரை மாவட்டத்தில்புதிதாக 11 பேருக்கு கரோனா 201 பேருக்கு தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 540 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 11 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 17 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 20,935 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 457 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 20,354 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 124 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

201 பேருக்கு கரோனா தடுப்பூசி 

மதுரை மாவட்டத்தில் 10 ஆவது நாளாக திங்கள்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 151 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 14 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 13 போ், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 போ், உசிலம்பட்டி தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 போ் என மொத்தம் 201 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 10 நாள்களில் 2,943 முனகளப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT