அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ஜனநாயக மாணவா் சங்கம், மகளிா் சங்கம் ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் மற்றும் மகளிா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் மற்றும் மகளிா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, அகில இந்திய ஜனநாயக இளைஞா் சங்கம், அகில இந்திய ஜனநாயக மகளிா் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய ஜனநாயக மகளிா் சங்கத்தின் மாநில கன்வீனா் ஹில்டா மேரி கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பலா் பங்கேற்று அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.