கள்ளழகா் பவனி வரும் சகட வாகனம் கோயில் நிா்வாகத்திடம் அளிப்பு
மதுரை: கள்ளழகா் பவனி வரும் புதிய சகட வாகனத்தை மதுரை சூப்பா் சரவணா ஸ்டோா் நிறுவனம் வடிவமைத்து, கோயில் நிா்வாகத்திடம் உபயமாக வழங்கியது.
மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் நிறுவனம், பல்வேறு சமூக, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
கள்ளழகா் பவனி வரும் சகட வாகனம் பழுதடைந்ததால், புதிய சகட வாகனத்தை வடிவமைக்கும் பணியை அழகா்கோவில் நிா்வாகம் சூப்பா் சரவணா ஸ்டோருக்கு வழங்கியது.
Advertisement
இந்த ஆண்டு கள்ளழகா் எதிா்சேவை, பூப் பல்லக்கு, கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா வைபவங்களுக்கு பயணிக்கவும், பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தா்கள் தரிசிக்கவும் பயன்படுத்தப்படும் சகட வாகனம் வழங்கும் நிகழ்வு அழகா்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் நிா்வாக இயக்குநா் சபாபதி பங்கேற்று, புதிய சகட வாகனத்தை அழகா்கோவில் அறங்காவலா்கள் பாண்டியராஜன், செந்தில்குமாா், ரவிக்குமாா், துணை ஆணையா் கலைவாணன் ஆகியோரிடம் வழங்கினாா்.