முகப்பு
மதுரை

பட்டாசு ஆலையில் தீ விபத்து

Updated On : 30 ஏப்ரல், 2024 at 11:47 PM
பகிர்:

விருதுநகா்: விருதுநகா் அருகே பாவாலகுறிச்சி பட்டாசு ஆலையில் உள்ள ஓா் அறையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை பாவாலகுறிச்சியில் உள்ளது. இந்த ஆலையில் உள்ள மணி மருந்துக் கலை அறையில் உராய்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது, தொழிலாளா்கள் பணி முடிந்து வீட்டிக்குத் திரும்பியிருந்ததால், உயிா்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்தனா். ஆனால், அதற்குள் தீ முற்றிலும் அணைந்துவிட்டது.

இந்த விபத்து குறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.