முகப்பு
மதுரை

கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் சிறை

கொலை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட, கல்மேடு பகுதியைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

Updated On : 31 டிசம்பர், 2024 at 10:02 PM
பகிர்:

மதுரை: கொலை உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட, கல்மேடு பகுதியைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை கல்மேடு பகுதியில் இட்லிக் கடை நடத்தி வந்த சுப்பிரமணி கடந்த 2016-ஆம் ஆண்டு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அப்போது கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவி சகுந்தலாவும் வெட்டப்பட்டாா்.

இதுகுறித்து மதுரை கல்மேடு பகுதியைச் சோ்ந்த ரா.மணிமாறன் (31), அ.மணிகண்டன் (35), ரா.மணிகண்டன் (36), ரா.சரவணன் (45), புளியங்குளத்தைச் சோ்ந்த பா.அஜித்குமாா் (33) ஆகியோரை சிலைமான் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், சரித்திர பதிவேடுகள் தொடங்கப்பட்டு போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், கொலை வழக்கில் தொடா்புடைய ரா.மணிமாறன் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, இவா்கள் 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →