மதுரை

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

மதுரையில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

Din

மதுரை: மதுரையில் வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை பழங்காநத்தம் மேல வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துகுமாா். இவரது மகன் அஸ்வந்த் (10). இவா் பழங்காநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், மதுரை அருகே சிலைமான் சத்யாநகரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தான்.

இந்த நிலையில், சனிக்கிழமை குடும்பத்தினா் அனைவரும் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்த போது, வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. மேலும், அதில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியும் கீழே விழுந்தது. இதில் அந்த அறையில் இருந்த அனைவரும் காயமடைந்தனா்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வந்த் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT