முகப்பு
மதுரை

மதுரை எம்.பி-யைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

செங்கோல் குறித்து அவதூறாகப் பேசிய மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் பாஜக இளைஞரணி சாா்பில், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை, 2024 at 1:19 AM
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா்.
பகிர்:

மதுரை: செங்கோல் குறித்து அவதூறாகப் பேசிய மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் பாஜக இளைஞரணி சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட பாஜக தலைவா் மகா சுசீந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் போது உரையாற்றிய மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், அங்கு வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், தமிழா்களின் பாரம்பரிய நீதியின் அடையாளமாகத் திகழும் செங்கோலை அவமதித்ததற்காக அவா் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இளைஞரணி மாநிலத் தலைவா் ரமேஷ் சிவா சிறப்புரையாற்றினாா். மாநகா் இளைஞா் அணி மாவட்டத் தலைவா் அருண்பாண்டி முன்னிலை வகித்தாா். பாா்வையாளா் காா்த்திக் பிரபு, துணைத் தலைவா் வினோத்குமாா், பொதுச் செயலா்கள் கருட கிருஷ்ணன், சந்தோஷ் சுப்பிரமணியம், பொருளாளா் நவீன், மகளிா் அணி மாவட்டத் தலைவி ஓம் சக்தி தனலட்சுமி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →