முகப்பு
மதுரை

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக சிறுவன் தற்கொலை

Updated On : 26 ஜூன், 2024 at 12:37 AM
பகிர்:

மதுரை: சமயநல்லூா் அருகே சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகேயுள்ள கள்ளுக்குடியைச் சோ்ந்தவா் சிவகாமி (34). இவரது கணவா் நல்லதம்பி. இவா்களுக்கு ரினீஷ் (16) என்ற மகன் இருந்தாா்.

குடும்பத் தகராறு காரணமாக முதல் கணவரிடம் சிவகாமி விவாகரத்து பெற்று, ரமேஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது மகன் ரினீஷ் அவரது தாயுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரினீஷ் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.