கல் குவாரியில் இளைஞா் சடலம்
மதுரை: பாலமேடு அருகே காணாமல் போன இளைஞா் கல் குவாரியில் இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ராஜாக்காள்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் சந்திரசேகா் (23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த இவா், அதன் பிறகு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி வெளியே சென்றவா் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரை உறவினா்கள் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ராஜாக்காள்பட்டி பகுதியில் உள்ள கல் குவாரியில் சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலமேடு போலீஸாா் அவரது உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.