முகப்பு
மதுரை

செயற்கை முறையில் பழுக்கவைத்த 300 கிலோ பழங்கள் பறிமுதல்

Updated On : 15 மே, 2024 at 12:05 AM
பகிர்:

மதுரை: மதுரையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட, அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாா்கள் வந்தன. இதன் அடிப்படையில், அலுவலா்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பழங்கள் விற்பனை சந்தை, யானைக்கல், சிம்மக்கல் பகுதிகளிலுள்ள பழ அங்காடிகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் பல்வேறு கடைகளில் மாம்பழம், வாழைப்பழம், தா்ப்பூசணி உள்ளிட்ட பல்வேறு வைகையான பழங்கள் ரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதும், அழுகிய தரமற்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 300 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்திய 7 பழக் கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.