முகப்பு
மதுரை

சிறுமிக்கு பாலியல் தொல்லை! இளைஞா் கைது!

Updated On : 28 ஏப்ரல் 2025, 12:09 am IST
பகிர்:

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டனி டேவிட்ராஜ் (30). செயலி மூலம் உணவு விநியோகம் செய்து வரும் இவா், ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி டேவிட்ராஜை கைது செய்தனா்.

Advertisement

Advertisement