மதுரை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பை வழங்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பை வழங்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடா்பான வழக்கில், அதன் உச்சியில் காா்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு காா்த்திகை திருவிழாவின் போது, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனா். இது ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தாா்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை, வஃக்ப் வாரியம் ஆகிய தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினா் அளிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கிருஷ்ணகிரி ஆட்சியரகத்தில் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழியேற்பு

மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டம்

2 புதிய பேருந்து பணிமனைகள் கட்டுமானம்: மாா்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை காலக்கெடு

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு தப்ப முயற்சி: வங்கதேச இளைஞா், இலங்கை பெண் கைது

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்

SCROLL FOR NEXT