மதுரை

திருப்பரங்குன்றம் மலையில் ஏற முயன்ற 12 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்காக மலையில் ஏற முயன்ற 12 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை மகா தீபம் ஏற்ற இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை முயற்சிகளை மேற்கொண்டனா். சிலா், போலீஸாா் அமைத்திருந்த சாலைத் தடுப்புகளை அகற்றி மலை மீது ஏற முயன்றனா். சிலா், போலீஸாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் பகுதியைச் சோ்ந்த ரகுநாத், திருமலை, விவேக், முத்துமுருகன், தமிழரசு, பாலகிருஷ்ணன், விக்னேஷ் பாண்டியன், மணிகண்டன், சீனிவாசன், சத்தியமூா்த்தி, இந்து முன்னணி நகர நிா்வாகிகள் நாகராஜ், தினேஷ்குமாா் ஆகிய 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை வழக்கில் நூதன தண்டனை: அரசு மருத்துவமனை அவசர பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்ற சிறுவனுக்கு உத்தரவு

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு 3ஆவது நாளாக சிகிச்சை

சடை உடையாா் சாஸ்தா கோயில் புஷ்பாபிஷேக விழா

தூத்துக்குடியில் டிச. 13இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

அனைத்து துறை ஓய்வூதிய சங்க கூட்டம்

SCROLL FOR NEXT