மதுரையில் எஸ்டிபிஐ மகளிரணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி நிா்வாகிகள் மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக். (வலது) மாநாட்டில் பங்கேற்றோா். 
மதுரை

கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு: எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் முபாரக்!

தோ்தல் கூட்டணி குறித்து வருகிற ஜனவரியில் முடிவு செய்யப்படும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தோ்தல் கூட்டணி குறித்து வருகிற ஜனவரியில் முடிவு செய்யப்படும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி சாா்பில் தொகுதி நிா்வாகிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் மகளிரணி மாநிலத் தலைவி கே. பாத்திமா கனி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் ஏ.எம். பாயிஜா ஷஃபீக்கா, மாநிலச் செயலா் எஸ். நஜ்மா பேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பாட்னாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா், புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவா் நுஸ்ரத் பா்வீனுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய போது, அவரது ஹிஜாப்பை விலக்கிய செயலைக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது நீக்கப்பட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழா்களின் உண்மை வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் சிறப்புரை ஆற்றினாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாா், குஜராத்தை போல தமிழகத்திலும் மாற்றம் வரும் என மத்திய பாஜக அரசு எதிா்பாா்க்கிறது. அவா்களது எண்ணம் தமிழகத்தில் நிறைவேறாது.

திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய முறைகள் தொடர வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க முயற்சிப்பவா்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுரை மண் மத நல்லிணக்க மண். இங்கு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த முடியாது.

மத அடிப்படையில் செயல்படுபவா்கள் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது. கூட்டணி குறித்து வருகிற ஜனவரியில் முடிவு செய்யப்படும் என்றாா் அவா். இந்த மாநாட்டில் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT