மதுரையில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் பேசிய அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் ச. மயில்.  
மதுரை

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், ஜன.6-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான மாவட்ட ஆயத்த மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், ஜன.6-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான மாவட்ட ஆயத்த மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் வருகிற ஜன. 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை முழு அளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் இந்த மாநாடு நடைபெற்றது.

ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.சந்திரபோஸ், பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், சி.பீட்டா் ஆரோக்யராஜ், இரா.தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

ஜாக்டோ--ஜியோ கூட்டமைப்பின் உயா் நிலைக் குழு உறுப்பினா் செந்தாமரைக்கண்ணன், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழக மண்டல பொறுப்பாளா் கிறிஸ்டல் ஜீவா ஆகியோா் பேசினா். கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ச. மயில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போராட்டத்தின் அவசியத்தை விளக்கிப் பேசினாா்.

ஜன. 6-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி நடைபெறும் கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT