மதுரை

கீழே தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரையில் கீழே தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்த ராஜூ மகன் சரவணசேகா் (58). முன்னாள் ராணுவ வீரரான இவா், மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், பணி நிமித்தமாக கோவைக்கு செல்வதற்காக அலுவலகத்திலிருந்த காரை எடுத்துக் கொண்டு ஆரப்பாளையம் பகுதி வைகையாற்றின் தென்கரைக்கு சனிக்கிழமை அதிகாலை சென்றாா்.

அங்கு காரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT