மதுரை

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ராணி மங்கம்மாள் சிலை அமைக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ராணி மங்கம்மாளின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என அனைத்து நாயுடு சங்கங்களின் நிா்வாகிகள் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அனைத்து நாயுடு சங்கங்களின் நிா்வாகிகள் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக நாயுடு கூட்டமைப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம், தமிழ்நாடு நாயக்கா் இளைஞா் அமைப்பு, கூடல்நகா் நாயுடு மகாஜன சங்கம் உள்ளிட்ட பல்வேறு நாயுடு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு பேசினா்.

இதில் மன்னா் திருமலை நாயக்கா் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கா் சிலையை அரசு செலவில் முழு உருவ வெண்கலச் சிலையாக மாற்றித்தர வேண்டும். தமுக்கம் மைதானத்துக்கு ராணி மங்கம்மாள் மைதானம் என பெயா் மாற்றப்பட வேண்டும்.

காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ராணி மங்கம்மாளின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நாயுடு சங்கங்களின் நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தைரியம் உண்டாகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

SCROLL FOR NEXT