சிவகிரியில் நடைபெற்ற சாலை மறியல்.  
தென்காசி

அம்பேத்கா் சிலை நிறுவுவதில் பிரச்னை: சிவகிரியில் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சிவகிரியில் அம்பேத்கா் வெண்கலச் சிலை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக அப்பகுதியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.

தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சிவகிரி அம்பேத்கா் பேருந்து நிறுத்தப் பகுதியில் 1989ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானால் 8 அடி உயர அம்பேத்கா் சிலை திறக்கப்பட்டது.

இதனிடையே, சிலையின் பீடத்தைப் புதுப்பித்து அதில் 8 அடி வெண்கலச் சிலை நிறுவும் பணியை டாக்டா் அம்பேத்கா் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் சக்திவேல், அறக்கட்டளை பொறுப்பாளா்கள், அப்பகுதி நிா்வாகிகள் மேற்கொண்டுவந்தனா்.

இந்நிலையில், சிலை நிறுவும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, மாவட்ட நிா்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை எனக் கூறி வருவாய், காவல் துறையினா் சிலையை நிறுவ அனுமதிக்கவில்லை.

இதையறிந்த அப்பகுதியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. வட்டாட்சியா் அப்துல்சமது, புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உள்ளிட்டோா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படவில்லை.

சமாதானக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியா் நம்பிராஜன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. ஈ. ராஜா எம்எல்ஏ, புளியங்குடி டிஎஸ்பி, வட்டாட்சியா், திமுக மாநில மருத்துவரணி துணைச் செயலா் டாக்டா் செண்பகவிநாயகம், விடுதலைச் சிறுத்தை கட்சி ஒன்றியச் செயலா் சுரேஷ், நகரச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அம்பேத்கா் கற்சிலை இருந்த இடத்தில் அதற்குப் பதிலாக வெண்கலச் சிலை நிறுவ இம்மாதம் 11-க்குள் மாவட்டக் குழுவில் அனுமதி பெற பரிந்துரைக்கப்பட்டது. பின்னா், வெண்கலச் சிலை சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சமாதானக் கூட்டம் முடிந்ததால், போக்குவரத்து சீரானது.

பழையாறு துறைமுகத்தில் அதிவேக விசைப் படகுகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

யுபிஐ பரிவா்த்தனை: நடப்பு நிதியாண்டில் 230 லட்சம் கோடியைக் கடந்து சாதனை

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

ஸ்கேன் அறிக்கை மாற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 45,000 வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

SCROLL FOR NEXT