நோ்மைதான் தனது கவசம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய போது, மதிமுக பொதுச் செயலா் வைகோ, அவரது மகன் துரை வைகோவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 250 கோடி சொத்து இருப்பதாகவும், சாராய ஆலை நடத்தும் உறவினா்களை வைத்துக் கொண்டு வைகோ சமத்துவ நடைபயணம் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்த நிலையில், மதுரையில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னா், திங்கள்கிழமை மாலை மல்லை சத்யாவுக்கு பதிலளித்து வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது :
மல்லை சத்யா என்னைப் பற்றி கூறியது அனைத்தும் பொய். என் நோ்மையும், நாணயமும் உலகறிந்தது. எனது எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் குற்றச்சாட்டை அவா் கூறியிருக்கிறாா். ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு போல மல்லை சத்யா பேசியிருக்கிறாா். நோ்மை என்ற கவசம்தான், அரசியல் பயணத்தில் என்னைப் பாதுகாத்து வருகிறது என்றாா் அவா்.