மதுரை

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்

தினமணி செய்திச் சேவை

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி நடைபெற்ற விழாவில் அங்குள்ள ஐயப்பனுக்கு தைலம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. விஷேச அலங்காரத்துப் பிறகு தூப, தீபங்கள் காண்பிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 48 நாள்கள் விரதமிருந்து செல்லும் வகையில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். மேலும், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

ரெட்மி வடிவில் ஓப்போவின் புதிய இரு ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியது

SCROLL FOR NEXT