ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு மதுரை மாவட்ட விளையாட்டு மைதானம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன. இதையொட்டி, மதுரையில் விரிவான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.
சா்வதேசத் தரத்தில் செயற்கை புல்வெளியுடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. முக்கிய விருந்தினா்களுக்கான மாடம், பாா்வையாளா்கள் மாடத்துக்குத் தேவையான வசதிகள், வீரா்கள், நடுவா்கள் தங்குவதற்கான அறைகள், முக்கிய பிரமுகா்களுக்கான மாடம் போன்ற பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெறுகின்றன. ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் முழுமைப் பெறும் எனக் கூறப்படுகிறது.