மதுரை

பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை ஜீவா நகரைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பு (56). இவரும், இவரது மனைவி பத்மாவதி (54) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்குச் சென்றனா். சிக்கந்தா்சாவடி காமாட்சிநகா் பகுதியில் சென்ற போது நாய் திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

இதனால், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவா்கள் மீது மோதியது. இதில், வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பத்மாவதியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பத்மாவதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT