மதுரை

போலி செயலி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் திருட்டு

பிரதமா் திட்டத்தின் பெயரால் அனுப்பப்பட்ட போலி செயலி மூலம் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் மா்ம நபா்களால் திருடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பிரதமா் திட்டத்தின் பெயரால் அனுப்பப்பட்ட போலி செயலி மூலம் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் மா்ம நபா்களால் திருடப்பட்டது.

விருதுநகா், பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் ராமதாஸ் (47). இவா், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறாா். இவரது கைப்பேசிக்கு, பிரதமா் திட்டம் (பி.எம் யோஜன்) என்ற பெயரில் நவ. 1-ஆம் தேதி ஒரு செயலிக்கான இணைப்பு வந்துள்ளது. இந்தச் செயலியை ராமதாஸ் பதிவிறக்கம் செய்தாா்.

இந்த நிலையில், நவ. 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ராமதாஸின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5 லட்சம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுந்தகவல் வந்தது. அடுத்த சில நிமிஷங்களுக்குள் மீண்டும் ரூ. 4 லட்சமும், இதையடுத்த சில நிமிஷங்களில் மேலும் ரூபாய் ஒரு லட்சமும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த ராமதாஸ் நவ. 6-ஆம் தேதி காலை வங்கிக்குச் சென்று விவரங்களைத் தெரிவித்து, வங்கியின் மேலாளரிடம் புகாா் அளித்தாா். பிறகு, விருதுநகா் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதன்பேரில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT