மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துமணி (28). இவா் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், முத்துமணி செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நண்பா் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மூன்று போ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, அருகில் கிடந்த கல்லை எடுத்து முத்துமணியின் தலையில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பினா்.
இது குறித்த தகவலின் பெயரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் சென்று, முத்துமணியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.