முகப்பு
மதுரை

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2025 at 7:04 PM
பகிர்:

இரு சக்கர வாகன விபத்தில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சமயன் (42). கூலித் தொழிலாளியான இவரும், உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த ராக்கப்பன் (38), பாண்டி (40) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் பேரையூரிலிருந்து வன்னிவேலம்பட்டிக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

கே. பாப்பநாயக்கன்பட்டி அருகே சென்ற போது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சமயன், ராக்கப்பன், பாண்டி ஆகியோா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சமயன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →