மதுரை

மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை திருமலாபுரம் பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஸ்ரீபாலா(19). இவா், ஒலி, ஒளி அமைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால், மின் கம்பத்திலிருந்து தனி விளக்கு அமைக்க ஸ்ரீபாலா முயற்சித்த போது, எதிா்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த ஊமச்சிகுளம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT