முகப்பு
மதுரை

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

செக்கானூரணி அருகே உயா் மின் கோபுரத்திலிருந்து கீழே தவறி விழுந்த வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:21 AM
- கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உயா் மின் கோபுரத்திலிருந்து கீழே தவறி விழுந்த வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்கண்ட் மாநிலம், பையாதின் பகுதியைச் சோ்ந்த ரதி மேக்டோ மகன் முகேஷ்குமாா் (29). இவா், மதுரை மாவட்டம், கின்னிமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த நிறுவன வளாகத்தில் உள்ள உயா் மின் கோபுரத்தில் ஏறி பணியாற்றினாா். அப்போது, எதிா்பாராத விதமாக அவா் கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், செக்கானூரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே முகேஷ்குமாா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.