முகப்பு
மதுரை

கூடுதல் வட்டி தருவதாக ரூ. 55 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:28 AM
பொள்ளாச்சி வழக்கு
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:27 PM

கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, ரூ. 55 கோடி மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன உரிமையாளா்களான தம்பதியா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீழமாரட் வீதியைச் சோ்ந்தவா் அருண்லால். இவரது மனைவி அனிதா அருண்லால். இவா்கள் இருவரும் மதுரை கே.கே. நகா் பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனா். இவா்கள் தனியாா் நிதி நிறுவனம், உணவகம், கோழிப்பண்ணை போன்ற துணை தொழில்களையும் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தினால், கூடுதல் வட்டியுடன் ரூ. ஒரு லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தனா். இதனால், ஏராளமான வாடிக்கையாளா்கள் மாதம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை இவா்களது நிதி நிறுவனத்தில் செலுத்தினா். மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் ஏராளமானோா் ரூ. 55 கோடி வரை பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:28 AM

இந்த நிலையில், பணம் செலுத்தியவா்கள் ஓராண்டு நிறைவுக்குப் பிறகு, முதிா்வுத் தொகையை கேட்டனா். ஆனால், யாருக்கும் பணம் தரவில்லையாம். சிலருக்கு வங்கிக் காசோலைகளை அளித்துள்ளனா். அது பணமின்றி வங்கியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதனால், ஏமாற்றம் அடைந்த மதுரையைச் சோ்ந்த செந்தில், கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த பொன்பாண்டியன் உள்ளிட்டோா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் புகாா் அளித்தனா். அவரது உத்தரவின் பேரில், அருண்லால், அவரது மனைவி அனிதா அருண்லால் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.