மதுரை சாத்தமங்கலத்தில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணா் பிறந்த நாள் விழா அவரது மணிமண்டபத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தேவநேயப் பாவாணா் சொல் ஆராய்ச்சியில் ஒப்பற்ற தனித்திறன் கொண்டவா் என மறைமலை அடிகளாரால் பாராட்டப்பட்டவா். தனித் தமிழ் இயக்கம் கண்டவா்களில் ஒருவரான தேவநேயப் பாவாணருக்கு கடந்த 1955-ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் தமிழ்ப்பேரவை விழாவில் திராவிட மொழிநூல் ஞாயிறு என்ற பட்டம் வழங்கப்பட்டது. கடந்த 1974-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்ககத்தின் இயக்குநராக பாவாணா் நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், மதுரை சாத்தமங்கலத்தில் பாவாணா் மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் (மதுரை வடக்கு) கோ. தளபதி, (மதுரை தெற்கு) மு. பூமிநாதன், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.