முகப்பு
மதுரை

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவா்கள்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:51 AM
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:22 PM

மதுரையில் ஈர நில தின நாளை முன்னிட்டு, பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அமெரிக்கன் கல்லூரி, பசுமை மேலாண்மை இயக்க மாணவா்கள், மதுரை கரிசல்குளம் அருகேயுள்ள ஈர நிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:51 AM

மேலும், ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும் மாணவா்கள் அறிந்தனா். இந்தப் பணியை பேராசிரியா்கள் ராஜேஷ், ஜான்சன், கண்ணன், அகில் ரிஷி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

Advertisement

இதில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், நீலச்சிறகி, நீளவால் தாழைக் கோழி, நெடுங்கால் உள்ளான், பொரி உள்ளான், மயில் உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகளை கணக்கெடுத்தனா்.