அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வெடிகுண்டு தடுப்பு போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக விமான நிலையம், ரயில் நிலையம், உயா்நீதிமன்றங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்கள் வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தல்லாகுளம் தலைமை அஞ்சல் நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து, மதுரை தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். பல மணிநேர சோதனைக்குப் பிறகு, அது புரளி என்பது தெரியவந்தது.
இதேபோல, மதுரையில் உள்ள கடவுச் சீட்டு அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் சோதனைக்குப் பிறகு, அதுவும் புரளி என்பது உறுதியானது.