கோப்புப் படம் 
மதுரை

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி! ஒரு குழந்தை உயிரிழப்பு!

தினமணி செய்திச் சேவை

குடும்பத் தகராறு காரணமாக, தனது இரு பெண் குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இவா்களில் ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ஷாலினி (32). கணவா், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியே சென்றாராம்.

இதனால், மனமுடைந்த ஷாலினி, தனது இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்தாா்.

பின்னா், கணவரைப் கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஷாலினி, தங்களது குழந்தைகளான மோகனாஸ்ரீ (6), விஜயாஸ்ரீ (4) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, வீட்டுக்கு விரைந்து வந்த மகேஸ்வரன், தனது மனைவி, இரு மகள்களையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு மோகனாஸ்ரீ உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT