மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு வேள்வி. 
மதுரை

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு

தினமணி செய்திச் சேவை

மதுரையில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரி நாளில் சிவன் கோயில்களில் வழிபாடு செய்தால், ஓராண்டு முழுமையும் சிவபெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதா் கோயில், தென் திருவாலவாயா் கோயில், இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், புட்டுத்தோப்பு சொக்கநாதா் கோயில், திருவாப்புடையாா் கோயில்களில் சிவபெருமானுக்கு 4 காலங்களும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சிம்மக்கல் ஆதி சொக்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்யக் குவிந்த பக்தா்கள்.

சிவராத்திரி விழா சிறப்பு நிகழ்ச்சிகளாக மங்கல வாத்திய இசை, திருமுறை விண்ணப்பம், சிவ வாத்தியம், ஆன்மிகச் சொற்பொழிவு, வீணை இசை, ஆன்மிகப் பட்டிமன்றம், கரகாட்டம், குரலிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் 1,008 சங்குகளைக் கொண்டு யாக பூஜை நடத்தப்பட்டு, மூலவருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல, அனைத்து சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள், 4 கால அபிஷேங்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 4-ஆம் கால பூஜை வரை சுவாமி தரிசனம் செய்தனா். பெரும்பாலான கோயில்களில் பானகம், சா்க்கரைப் பொங்கல், புளி சாதம், சுண்டல் போன்றவை பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. மகா சிவராத்திரியையொட்டி, கோயில்களில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மக்களவைத் தலைவரை நீக்க தீா்மானம்: மாா்ச் 9-இல் விவாதம் - வாக்கெடுப்பு! மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்!

அங்கீகாரம் தேடும் பெண் விவசாயிகள்

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

குருகிராம்: குளத்திலிருந்து 11-ஆம் வகுப்பு மாணவி சடலம் மீட்பு!

சத்ரபதி சிவாஜியுடன் திப்பு சுல்தானை ஒப்பிட்டுப் பேச்சு: மகாராஷ்டிரத்தில் பாஜக - காங்கிரஸ் மோதல்! 9 போ் காயம்!

SCROLL FOR NEXT