முகப்பு
இந்தியா

மகா சிவராத்திரி - பிரதமர் மோடி வாழ்த்து!

சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் - பிரதமர் மோடி

Updated On : 15 பிப்ரவரி 2026, 11:03 am IST
- ANI
பகிர்:

மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) உலகெங்கிலுமுள்ள ஹிந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை (பிப். 16) அதிகாலை சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பக்தர்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியை தமது எக்ஸ் தளப் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

அவர் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடெங்கிலுமுள்ள எமது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள். ஒவ்வொருவர் மீதும் மகாதேவர் தமது கருணைப் பார்வையைச் செலுத்தட்டும் என்பதே எமது பிரார்த்தனையாக அமைந்திருக்கிறது. சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார்.

summary

Maha Shivratri - Prime Minister Modi wishes you!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments