மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் தெற்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள்:
சுப்பிரமணியபுரம்
தெற்கு வெளிவீதி, பவா் ஹவுஸ் சாலை, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகாரத் தெரு, பாவாஸா சந்து, நாடாா் வித்தியாசாலை, சின்னக்கடைத் தெரு, மஞ்சணக்காரத் தெரு, சிங்காரத் தோப்பு, முகையதீன் ஆண்டவா் சந்து, வைக்கோல்காரத் தெரு, பாப்பன்கிணற்றுச் சந்து, தென்னோலைக்காரச் சந்து, முகம்மதியா் சந்து, பெரியாா் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் சாலை, திண்டுக்கல் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவாா் கோவில் தெரு, மேல வடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹுராநகா், திடீா்நகா், சுப்பிரமணியபுரம் 1, 2, 3-ஆவது தெருக்கள், எம்.கே. புரம் நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி. சாலை, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் சந்தை பகுதிகள், வி.வி. கிரி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளா் தெரு, வீரராகவப் பெருமாள் கோவில் பகுதி, கான்சா மேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ச், காஜியாா் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சா்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகம்மதியா் தெரு, கண்ணாடிகாரத் தெரு.
மாகாளிபட்டி
மகால் 1 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் சாலை, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளியம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், புதுமாகாளிபட்டி சாலை, புதுமாகாளிபட்டி வடக்குப் பகுதி, கிருதுமால் நதி சாலை, திரௌபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையாா் பாளையம் கிழக்குப் பகுதி, மேற்குப்பகுதி, செட்டியூரணி, எப்.எப். சாலை, பாம்பன் சாலை, சண்முகமணி நாடாா் சந்து, மகால் பகுதிகள், பேலஸ் சாலை, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்துப்பிள்ளை சாலை, சிந்தாமணி சாலை, மூலக்கரை, சூசையப்பா்புரம், அழகாபுரி, எம்.எம்.சி. குடியிருப்பு, ஓட்டு காளவாசல், ராஜமான்நகா், செபஸ்டியா்புரம், கே.ஆா். ஆலை சாலை, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, மிஷன் மருத்துவமனை, வீமபிள்ளை வடக்குச் சந்து, வாழைத் தோப்பு, என்.எம்.ஆா். சாலை, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக் கல்லூரி, நாகுபிள்ளை தோப்பு.