சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு  
மதுரை

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் நிஜாமுதீன், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், காரியாவிடுதி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வந்த, இந்தப் பள்ளி கடந்த 2013-ஆம் ஆண்டு அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.

இங்கு, சுமாா் 150-க்கும் மேற்பட்ட கிராமப் புற மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில், 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் பொதுவெளியில் கல்வி பயின்று வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை அலுவலா்களுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, காரியாவிடுதி பள்ளிக்கு போதிய வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் புகாா் குறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆக்கபூா்வமான விவாதம்: எம்.பி.க்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுரை

SCROLL FOR NEXT