தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததைக் கண்டித்து, தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவரது வருகைக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, தோ்தலுக்காக பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வந்ததாகக் குற்றம்சாட்டி, அவரைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.