முகப்பு
மதுரை

புதிய நாற்காலிகள் சிக்கின: சமுதாயக் கூடத்துக்கு சீல் வைப்பு!

மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

Updated On : 31 மார்ச், 2026 at 7:24 PM
சமுதாயக் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய நாற்காலிகள் | சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்த ஊழியா்
பகிர்:

மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட நாடாா் சந்து பகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழா் கட்சியினா் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்த சமுதாயக் கூடத்தை திறந்து தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, அங்கு 187 புதிய நெகிழி நாற்காலிகள், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நாற்காலிகள், பனியன்கள் தோ்தல் அறிவிப்புக்கு முன்பு வாங்கப்பட்டவை என திமுகவினா் சிலா் தெரிவித்தனா். இதையடுத்து அந்த சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.