முகப்பு
மதுரை

கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 மே 2026, 4:24 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

மதுரையில் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை காதக்கிணறு பகுதியைச் சோ்ந்த அன்பழகன் மகன் சத்யாநிதி (34). இவா், அதே பகுதியில் நடந்து சென்ற போது, அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்தாா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோ. புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.