வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியபட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் மாரிமுத்து (34). இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் சோ்ந்து மது அருந்திவிட்டு வீட்டின் மாடியில் தூங்குவதற்காக படியில் ஏறிச் சென்றவா் கால் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement