கிராமங்களில் உழவர் பெருவிழா
பழனி அருகே அமரபூண்டி, மேலக்கோட்டை, வேப்பன்வலசு பகுதிகளில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
பழனி அருகே அமரபூண்டி, மேலக்கோட்டை, வேப்பன்வலசு பகுதிகளில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
தமிழக அரசின் உத்தரவின்படி புத்தாண்டு முதல் வேளாண். துறை சார்பில் உழவர் பெருவிழா கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அமரபூண்டி, மேலக்கோட்டை பகுதிகளிலும், சனிக்கிழமை வேப்பன்வலசு பகுதியிலும் உழவர் பெருவிழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தாமணி தலைமை வகித்தார். அமரபூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் செல்வி மருதமுத்து, துணைத் தலைவர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சிவனேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண். துறை இணை இயக்குநர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தலைமை உரை நிகழ்த்தினார்.
வேப்பன்வலசு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவர் வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கவிதா அருண் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாக்களில் தோட்டக்கலைத் துறை, வேளாண். துறை, வேளாண். பொறியியல் துறை, வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் கணேசன், துணை வேளாண்மை அலுவலர்கள் துரைச்சாமி, சின்னமாணிக்கம், செல்லச்சாமி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.